டெல்லி விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மற்றொரு விமானம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அதற்கான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈடி 687 என்ற விமானம் நிறுத்தப்பட்டிருந்து.
இந்த விமானம் புறப்படுவதற்கு தயாரான போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியன் விமானத்தின் மீது மோதியது. மிகவும் மெதுவாக விமானத்தை நகர்த்தும் போது விமானத்தின் மீது மோதியதால் இரு விமானங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 196 பயணிகள் இறக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

No comments:
Post a Comment