விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையாட்டி, காய்கனிகளால் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவம், புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்த ஈபிஎஸ், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய முதல்வர் ஈபிஎஸ், காட்டில் நரி செய்யும் சூழ்ச்சி போன்று நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கின்றனர். எனவே, கட்சி தொண்டர்கள் ஒரே அணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டும் என்றார். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி, இது உங்கள் ஆட்சி. சூழ்ச்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று கூறிய அவர், ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சங்கராபுரம் பேரூராட்சிகள், மரக்காணம், திருவெண்ணை நல்லூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் விழுப்புரத்தில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

No comments:
Post a Comment