மண்ணெண்ணெய் மானியத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக
கூறப்படுகிறது.
சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.
அத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ4 அளவுக்கு
உயர்த்தவும் அனுமதி அளித்தது.
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த
நிலையில் மண்ணெண்ணெய்யிலும் மத்திய அரசு கைவைக்க முடிவு செய்துள்ளது.
மண்ணெண்ணெய் மானியத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன. மேலும் மண்ணெண்ணெய் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை
லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.
மண்ணெண்ணெய் உபயோகம் குறைவதால் மானியம் ரத்து செய்யப்படுகிறதாம்.
No comments:
Post a Comment