கொடைக்கானலில் இருந்து மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா வெளியேற வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.மணிப்பூரில் ஆயுத படையினருக்கு அதிகாரம் அளிக்கும் சிறப்பு சட்டத்தை ரத்து
செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. தமது
பல ஆண்டுகால போராட்டத்தைக் கைவிட்டு தேர்தலில் குதித்தார் இரோம் ஷர்மிளா.
ஆனால் மணிப்பூர் மக்களோ இரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகளே அளித்தனர்.
இதனால் அவர் மணிப்பூரை விட்டே வெளியேறி கொடைக்கானலில் வசித்து வருகிறார்.
தமது காதலரை கொடைக்கானலில் திருமணம் செய்யவும் இரோம் ஷர்மிளா
திட்டமிட்டுள்ளார். ஆனால் இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் முகாமிட்டு பழங்குடி
மக்களுக்காக போராட்டம் நடத்துவார் என்பதால் அவரை வெளியேற்ற வேண்டும் என
கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் இரோம் ஷர்மிளாவை வெளியேற்ற
கோரி இன்று அவரது வீட்டை முற்றுகையிடவும் முயற்சித்தனர். இதனால்
கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment