குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் மர்ம நபர்கள் ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே

அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார். இந்த தாக்குதல் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற வெறுப்புணர்வால் பாஜகவால் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது. உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான தாக்குதல் குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை அம்பலப்படுத்தியுள்ளது.
இதனிடையே ராகுலுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியும் போராட்டம் நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு ரிசார்ட்டில் அடைத்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடந்துள்ளது. மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டுவிட்டு, எம்.எல்.ஏக்களை சொகுசாக இருக்க வைப்பதா? என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment