அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம், ரேஷன் பொருட்கள் பெற, முதியோர் உதவித் தொகை என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிப்புகள் வெளியாயின. மாணவர்களின் மதிய உணவு திட்டத்துக்கும் ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறப்பை பதிவு செய்ய அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment