திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
முதுமை காரணமாக கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
செயற்கை உணவு குழாய்
இந்த
செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த
சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு இந்த
செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டது.
திருமாவளவன் சந்திப்பு
இதனைத்
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது, கருணாநிதி தம்மை அடையாளம் கண்டு
கொண்டதாகவும் பேச முயற்சித்தார் எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
வைகோ
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று இரவு கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
வீட்டுக்குப் போனார் கலைஞர் கருணாநிதி-வீடியோ
பவள விழாவுக்கு வாழ்த்து
பின்னர்
கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். அப்போது
முரசொலி பவள விழாவுக்கும் கருணாநிதிக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
கண்கலங்கிய வைகோ
கருணாநிதியுடனான
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 29 ஆண்டுகாலம்
கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தமது கையை கருணாநிதி பற்றியபோது கண்ணீரை அடக்க முடியவில்லை; கருணாநிதியும்
கண்ணீர் சிந்தினார்; கருணாநிதியின் புன்னகைக்குள்ளும்
கண்ணீர்துளிக்குள்ளும் ஆயிரமாயிரம் செய்திகள் இருக்கின்றன என்றார் வைகோ.
No comments:
Post a Comment