சென்னையையும் தாக்கியுள்ளது "ப்ளூவேல் கேம்" விளையாட்டு.
விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே
குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது.
படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பல உயிர்களைப்
பறித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து அறிமுகமான இந்த விபரீத விளையாட்டுக்கு
தொடர்ந்து இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். பல சுற்றுக்களைக் கொண்ட இந்த
விளையாட்டின் இறுதிச் சுற்று மரணம் என்பதுதான் மிகக் கொடுமையானது,
கோரமானது.
ஆனால் இந்தக் கோர விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்கள் பலர் முட்டாள்தனமாக
தற்கொலையை நாடி வருவது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இந்த நிலையில் இன்று
சென்னையில் ஒரு கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற செயல் அதிர வைத்துள்ளது.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த மாணவி ப்ளூவேல் விளையாட்டை பல சுற்று
விளையாடியுள்ளார். இறுதியில் தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின்
7வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். படுகாயமடைந்த அவரை
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment