அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் கடந்த 28.07.2017 வெள்ளிக்கிழமை அன்று அதிரை அனைத்து முஹல்லா
பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணை கூட்டம் காலத்தின் கட்டாயம் கருதி துபை த.மு.மு.க மர்கஸில்
கூடியது.
இன்றைய காலச்சூழலில் நம்மிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளையும், முந்தைய கசப்புகளையும் புறந்தள்ளிவிட்டு
மீண்டும் தாயகத்தில் உள்ள நமது முஹல்லா சங்கங்களையும், அமீரகத்தில் செயல்படும் நமது முஹல்லா சங்கங்களையும்
ஒன்றிணைத்து கூட்டமைப்பாக செயல்படுவதே
சாலச்சிறந்தது என பல்வேறு நடப்புக்களையும் எடுத்துக்கூறி ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே கூட்டமைப்பாக செயல்பட்டு வந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டிற்குப்பின் செயல்படாமல்
இருப்பதால் அதற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை
ஏற்படுத்துவதா அல்லது அதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு புத்துயிர் ஊட்டி
செயல்படுவதா என்பது குறித்து விரிவாக
ஆலோசிக்கப்பட்டு இறுதியாக மீண்டும் அதே பெயரிலேயே புதிய உத்வேகத்துடனும் புதிய
நிர்வாக அமைப்புடனும் தொடர்வது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் முஹல்லாவுக்கு 3 பேர் என அமீரகத்தில் செயல்படும் அதிரையின் முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டு எதிர்வரும் 18.08.2017 அன்று மீண்டும் கூடி ஆலோசித்து
முதற்கட்ட செயல்வடிவம் தருவது எனவும்
தீர்மானிக்கப்பட்டது.
இந்த முதற்கட்ட ஆலோசணை அமர்வில் நமதூர் முஹல்லா சங்கங்களின் கீழ்க்காணும்
பரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
1. முஹமது அஸ்லம் - நெசவுத் தெரு
2. செய்யது மீரான் - நெசவுத் தெரு
3. காதர் அலி - தரகர் தெரு
4. பிஸ்மில்லாஹ் கான் - தரகர் தெரு
5. சேக் அலாவுதீன் - தரகர் தெரு
6. மைதீன் - தரகர் தெரு
7. பக்கீர் முஹமது - கீழத்தெரு
8. ஜியாவுதீன் - கீழத்தெரு
9. முஹமது அஜீஸ் - கீழத்தெரு
10. நெய்னா முஹமது - கீழத்தெரு
11. முஹமது யூசுப் - நடுத்தெரு
12. அமீன் - நடுத்தெரு
13. அப்துல் காதர் - நடுத்தெரு
14. ஹாஜா முகைதீன் - மேலத்தெரு
15. முஹமது மாலிக் - மேலத்தெரு
16. சேக் நஸ்ருதீன் – மேலத்தெரு
17. சாகுல்
ஹமீது --- கடற்கரைதெரு
மேற்படி
ஆலோசணைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத முஹல்லா சங்கப் பிரதிநிதிகளும், இன்னும் அமீரகத்தில் செயல்படும் நமதூர் பிற முஹல்லா பிரதிநிதிகளும்
அவசியம் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கீழ்க்காணும் தொடர்பு
எண்ணில் தொடர்பு கொண்டு எதிர்வரும் 15.08.2017 ஆம் தேதிக்குள் தங்களுடைய வருகையை
உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
முஹமது மாலிக் -
055 2481483, 050 7914780
அழைப்பின்
மகிழ்வில்...
புதிய அதிரை
அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
No comments:
Post a Comment