கதிராமங்கலத்திற்கு சென்ற தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மற்றும் காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கைது செய்யப்பட்டார்.
ஓஎன்சிஜி கிணறுகளை மூட கதிராமங்கலம் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் பெ.மணியரசன் கிராமத்தில் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் மணியரசன் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை தடையை மீறி நுழைய முயன்ற பெ.மணியரசன் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். மணியரசு உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment