பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்தை அதிமுக
(அம்மா) கட்சி ஆதரிக்கும் என டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளதால்,
அவருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நடுவேயான மோதல்
அம்பலமாகிவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணிக்கு எதிராக திரும்பிய நிலையில், அவருக்கு
பதிலாக மூத்த அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார்.
இவர் தங்களுக்கு விசுவாசமாக இருப்பார் என சசிகலா நினைத்திருந்தார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியிடையே
உரசல் ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டல அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்
முதல்வர் பின்னால் அணி திரண்டுள்ளனர்.
செய்திகள்
டிவி தினகரன் மற்றும், எடப்பாடி ஆகியோர் நடுவேயான உரசல், மற்றும்
பஞ்சாயத்துகள் குறித்து நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் நீண்ட நாட்கள்
முன்பிருந்தே தொடர்ந்து செய்திகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
அதிமுகவிற்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து முன்கூட்டியே
தெரிவித்து வருகிறோம்.
நிரூபித்த அதிமுக
இந்த செய்திகளை உண்மை என அதிமுக தரப்பே மறைமுகமாக இன்று
ஒப்புக்கொண்டுள்ளது. பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை, அதிமுகவின் அம்மா
அணி ஆதரவளிக்க உள்ளது என அக்கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் முடிவு தன்னிச்சையானதா?
டிடிவி தினகரன் அறிவிப்பின் அர்த்தம் என்ன? அப்படியானால், முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி, தாங்கள் பாஜக வேட்பாளருக்கே ஆதரவு அளிக்க உள்ளோம் என 2
நாட்கள் முன்பு அறிவித்தது தன்னிச்சையானதா?
டெல்லி சென்றார்
ஆம்.. 2 நாட்களுக்கு முன்பே அதிமுக அம்மா கட்சியினர், பாஜக
வேட்பாளருக்குதான் ஆதரவு என அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும்,
ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதிலும்
எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.
மூன்று கோஷ்டி
இந்த நிலையில் இன்றுதான் டிடிவி தினகரன், தனது கட்சி குடியரசு தலைவர்
தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். அதில் எடப்பாடி
ஏற்கனவே அறிவித்தபடி என்ற வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. எடப்பாடி
ஆதரவு அளிப்பதாக கூறி டெல்லிக்கும் சென்ற நிலையில், தினகரன்
அறிவித்துள்ளதன் மூலம், அதிமுக உடைந்து அதிகாரப்பூர்வமாக 3 கட்சிகளாக
காட்சியளிக்கிறது. ஏனெனில், ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தனது அணியான அதிமுக
புரட்சி தலைவி அம்மா கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக வேட்பாளருக்கே ஆதரவு என
அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment