ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான
வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பாரதீய ஜனதா சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வருகிற 23 ஆம்
தேதிக்குள் அறிவிக்கவுள்ளதாக வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். மேலும்,
பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை
நிறுத்தவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று கூடுகிறது. கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், தேசிய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என பாஜக-வின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா சார்பில் பீகார் கவரனர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டு உள்ளார்.
பாரதீய ஜனதா ஆட்சிமன்ற குழு கூட்டத்திற்கு பின் பாரதீய ஜனதா தலைவர் இதனை அறிவித்து உள்ளார்.
வக்கீலான ராம்நாத் கோவிந்த் பாரதீய ஜனதாவின் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு தலைவராக இருந்தவர்.ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் கவர்னராக உள்ளார். உத்தர பிரதேசத்தில் இருந்து 2 முறை மேல் சபை எம்பி.யாக தேர்ந்து

எடுக்கப்பட்டவராவார்.
No comments:
Post a Comment