ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான மீராகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக ஆதரவு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
ஜனாதிபதிக்கான
14-ஆவது தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக சார்பில்
ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு
அதிமுகவின் இரு அணிகளும், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட
கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தலித் வேட்பாளரான இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் குறித்து
எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இதைத் தொடர்ந்து முன்னாள் சபாநாயகர்
மீராகுமார் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதிமுகவின் ஆதரவு எம்எல்ஏ-வான தமிமுன் அன்சாரி ஜனாதிபதி தேர்தலில்
தனது ஆதரவு மீராகுமாருக்கு என்று அறிவித்துள்ளார். அதிமுகவின் அம்மா
அணியினரும், கூட்டணி கட்சியினரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கொடுக்க
வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரியிருந்த நிலையில் தமிமுன் அன்சாரி
இதுபோல் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment