சசிகலா கோஷ்டியிடம் ரூ 10 கோடி வாங்கியதாக கூறப்பட்டதை நடிகர் கருணாஸ் எம்எல்ஏ மறுத்துள்ளார்.
நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், எம்எல்ஏ சரவணன் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்வேன் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கூவத்தூரில் நான் என் நண்பரின் விடுதியில்தான் தங்கியிருந்தேன். கூட்டம் என்றதால்தான் அவர்களோடு கலந்துகொண்டேன்.
அமைச்சர்களிடம்,
கண்மாய் தூர்வாரப்பட வேண்டும், அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்குங்கள், என்
தொகுதியில் அனைவருக்கு குடிநீர் கிடைக்க உதவுங்கள் என்றுதான்
கேட்டிருக்கிறேன்.
தவிர எனது தேவைக்காகவோ, எனது அமைப்பின்
தேவைக்காகவோ யாரிடமும் நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை.
அப்படியிருக்க நான் பணம் வாங்கியதாக இப்படி அபாண்டமான பொய்யை, சரவணன்
எம்.எல்.ஏ கூறியிருக்கிறார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்," என்று
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment