257 பேரை பலிகொண்ட 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் உள்ளிட்டோரின் கூட்டு சதியால் 1993-ம் ஆண்டு மும்பையில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயமடைந்தனர்.
தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு உதவியதில் முக்கிய பங்கு வகித்த முஸ்தபா டோசா 2003-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் முஸ்தபா டோசா, அபு சலீம் உள்ளிட்டோரை குற்றவாளிகள் என பிரகடனப்படுத்தியது சிறப்பு நீதிமன்றம். இதைத் தொடர்ந்து நேற்றுதான் சிபிஐ தரப்பில் முஸ்தபா உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.இந்நிலையில் நீரிழிவு நோய்க்காக மும்பை ஜேஜே மருத்துவமனையில் முஸ்தபா டோசா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. முஸ்தபா டோசாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment