என்னோடு உழைப்பினால் மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன்
நான். தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் என்று முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே விரைவில் பேசுவார்த்தை
நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் ஒருவர் மீது
ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம்
குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளில்
ஓபிஎஸ் தரப்பு பிடிவாதமாக உள்ளது. இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்
மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வோம் என ஓபிஎஸ் தரப்பு கறாராக
உள்ளது. இதனால் பேச்சுவார்ததையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு வேண்டுமென்றே சிலர்
முட்டைக்கட்டை போடுகின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஓபிஎஸ்
அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர். உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து
இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. ஆட்சியை கைப்பற்றலாம் என்ற திமுக,
பிரிந்துசென்ற அணியினர் கனவு கானல் நீர். நிதிப்பற்றாக்குறையிலும்
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
என்னோடு உழைப்பினால் மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன் நான்.
தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். நம்பிக்கை
வாக்கெடுப்பு மூலம் பலத்தை நிரூபித்துள்ளோம். 90% நிர்வாகிகள் எங்கள்
அணியிலேயே தான் உள்ளனர். அதிமுகவை முடக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம்
புகட்டப்படும். ஆட்சியை கலைக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளின்
எண்ணம் நிறைவேறாது என்று கூறினார்.
No comments:
Post a Comment