கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் சாமி, தீப்பு, சதீசன்
மற்றும் உதயகுமார் ஆகியோரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
கைதான 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க குன்னூர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. கொலை தொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு
எஸ்டேட் உள்ளது. இங்கே ஆண்டுக்கு ஒருமுறை ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பது
வழக்கம். அங்கு ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அங்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்
கொள்ளப்பட்டது. தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
அங்குள்ள 10ஆம் நம்பர் கேட்டில் பணியில் இருந்த ஓம்பகதூர் மற்றும்
கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலாளிகளாகப் பணி புரிந்து வந்தனர். கடந்த
திங்கள்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஓம் பகதூர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பது தெரியவந்தது.
No comments:
Post a Comment