ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தின்போது, சசிகலா போட்டோவை பயன்படுத்தாமல்
தவிர்த்து வருகிறது டிடிவி தினகரன் தரப்பு.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுத்ததை திழக மக்களில் பெரும்பாலானோர் அதிலும் குறிப்பாக பெண்கள்
சுத்தமாக ஏற்கவில்லை. சசிகலா காட்டிய அவசரம் அவர்கள் மனதில் பல கேள்விகளை
எழச் செய்து வெறுப்பாக மாற்றியது.
ஆனால், அதிமுக தரப்பிலோ, ஜெயலலிதா அரசியலில் நீடித்ததற்கு காரணமே
சசிகலாதான், அவர்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றெல்லாம் புதுப்புது தகவல்களை
தினமும் வெளியிட்டனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இதையெல்லாம் ஏன்
கூறவில்லை என்ற எதிர் தரப்பு கேள்விக்கு மட்டும் மவுனம் சாதித்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற
சசிகலா தற்போது பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 15ம் தேதி மாலையில், அவர் சிறை செல்லும் முன்பாக,தனது அக்கா மகன்
டிடிவி தினகரனை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டதோடு, அதே நாளில்,
கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியையும் வழங்கினார்.
தொப்பி சின்னம்
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நானே களமிறங்க
உள்ளேன் என அறிவித்தார், டிடிவி தினகரன். ஆனால், தேர்தல் ஆணையத்தில்
ஓ.பி.எஸ் அணி கொடுத்த புகாரைத் தொடர்ந்து, அதிமுக என்ற பெயரை
பயன்படுத்துவதோ, கட்சி சின்னத்தை பயன்படுத்துவதோ கூடாது என தேர்தல் ஆணையம்
உத்தரவு பிறப்பித்தது. தினகரன் தற்போது அதிமுக-அம்மா என்ற கட்சியின்
பெயரில், தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
எதிர்பார்த்த சசி ஆதரவாளர்கள்
சசிகலா முதல்வராக முயன்றவர், தனக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது
என ஆளுநரிடம் மனு வழங்கியவர். மேலும் அவரது ஆதரவாளர்கள் கூற்றுப்படி,
அவர்தான் ஜெயலலிதாவுக்கே அரசியல் சொல்லிக்கொடுத்த குரு. எனவே சசிகலா என்ற
சின்னம்மாவின் பெயரையும், போட்டோவையும் பெரிதாக போட்டு தினகரன் பிரசாரம்
செய்வார் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே.
போட்டோ இல்லை
தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், துண்டு
பிரசுரங்களில் எந்த ஒரு இடத்திலும் சசிகலா போட்டோ இல்லை. ஜெயலலிதா
உருவப்படத்தை பெரிதாக பிரிண்ட் செய்து கீழே சிறு அளவில் தினகரன் போட்டோவை
வெளியிட்டு தொப்பி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது
தினகரன் தரப்பு. சசிகலா மீது மக்களுக்கு கோபமேயில்லை என கூறிவந்த அவரது
ஆதரவாளர்கள் ஏன் இப்போது மக்களிடம் சசிகலா போட்டோவை காண்பித்து வாக்கு
கேட்க பயப்படுகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
எங்கே தேடுவேன்..
இதுகுறித்து நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
தியாகத்தாய், தியாகச்செம்மல், அம்மாவின் ஆன்மா, கழக 2வது
நிரந்தரப்பொதுச்செயலாளர், கூவாத்தூர் தாய், A2 அக்யூஸ்ட் மினிமா போட்டோ
எங்கடா..??
செல்வாக்கு இல்லை
தொகுதியில் ஒரு இடத்திலும் சசிகலா பெயரோ,புகைப்படமோ இல்லை! அதெல்லாம் மக்கள் மத்தியில் செல்லாக்காசு என இவங்களுக்கே தெரியுது .
No comments:
Post a Comment