ஆர்கேநகர் தேர்தல் முடிவு வெளியானதும் அதிமுகவுக்கு தலைமையேற்கப்போவது
நான்தான் என அடித்துக் கூறியுள்ளார் தீபா.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா
பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தீபா நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட
இந்த தொகுதி மக்கள் தான் காரணம். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து
கொள்கிறேன்.
மக்கள்
ஜெயலலிதாவின் வாரிசு யார்? என்பதை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க.
தொண்டர்களுக்கும் இந்த தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள். இந்த தேர்தல் வெற்றி
என் வாழ்க்கையில் ஒரு சரித்திரமாக அமையும்.
அதிமுக தலைமை
அதிமுகவுக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அது நான் என்பதில் அ.தி.மு.க.
தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக
தலைமையை ஏற்று ஜெயலலிதாவின் வழியில் கட்சியை கொண்டு செல்வேன்.
சின்னம்
ஆர்.கே.நகர் மக்களிடம் கலந்து பேசியுள்ளேன். ஜெயலலிதா அளித்த வாக்குறுதி
அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
தேர்தல் கமிஷன் எனக்கு என்ன சின்னம் ஒதுக்குகிறதோ அதில் போட்டியிடுவேன்.
வேட்புமனு தாக்கலை தடுத்தனர்
உரிய நேரத்தில் எனக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக் கவில்லை. பிற்பகல்
1.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வர சொன்னார்கள். ஆனால் அதே
நேரத்தில் டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
எனக்கு மாற்று வேட்பாளர்கள் என்று யாரும் கிடையாது. என்னுடைய உண்மையான
தொண்டர்கள் தான் எனக்கு மாற்று வேட்பாளர்கள். இவ்வாறு தீபா கூறினார்.
No comments:
Post a Comment