(உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் தடுமாறும் மாணவர்கள் பெற்றோர்களின்
மனங்களில் எழுகின்ற வினாக்களுக்கு விடை தேடுபவர்களுக்கான ஒரு கட்டுரை.)
1. அறிவியலும், விஞ்ஞானமும் தங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் போட்டா போட்டி போட்டு சென்று கொண்டிருக்கும் சூழலில், குழந்தைகள் முதல் எல்லோரும் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்தி (Update) கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், சுமார் 5 – 10 வருடங்களாக முஸ்லிம் சமூகம் தங்களுக்கான கல்வி குறித்த முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பது அடுத்த தலைமுறைக்கான அஸ்திவாரங்களையும்,
1. அறிவியலும், விஞ்ஞானமும் தங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் போட்டா போட்டி போட்டு சென்று கொண்டிருக்கும் சூழலில், குழந்தைகள் முதல் எல்லோரும் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்தி (Update) கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், சுமார் 5 – 10 வருடங்களாக முஸ்லிம் சமூகம் தங்களுக்கான கல்வி குறித்த முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பது அடுத்த தலைமுறைக்கான அஸ்திவாரங்களையும்,
ஆரோக்கியமான சமூகத்தை நிலை நாட்டுவதற்கான பயணத்தில் பயணப்பட்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை உயர்ந்த சமூகம் என்று போற்றப்படுகின்ற எந்த சமூகமாக இருந்தாலும் அது அறிவால், அறிவாற்றலால் தங்களை உயர்த்திய சமூகமாகத்தான் இருந்திருக்கிறது என்பது வரலாறு கூறும் உண்மை.
அன்றாடம் மாறுகின்ற வாழ்வினில் அடுத்த ஆராய்ச்சி எதை நோக்கி பயணப்படும் என்ற எதிர்பார்ப்பும், வேட்கையும் அறிவு சார்ந்தவர்களின் மனதிற்குள் விடை தேடும் வினாவாக இருக்கின்ற போது, நமது குழந்தைகளை எந்த படிப்பு படிக்க வேண்டும்? எதை நோக்கி அவர்களை பயணிக்க வைக்க வேண்டும் என்ற தெளிவில்லாத, லட்சியமில்லாத வாழ்வை நோக்கி சிலர் பயணப்பட்டு இருப்பதால், அவர்களின் இருப்பை தெளிவாக்கும் கண்ணோட்டத்திலும், +2 முடித்த பின் மாணவர்களுக்கு எந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தடுமாறும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இக்கட்டுரை பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
நான் நல்லவன்; நன்றாக படிப்பேன்; நன்றாக பேசுவேன் எனக்கு எல்லாம் தெரியும் என்று நமக்கு நாமே தம்பட்டும் அடிப்பதால் யாருக்கும் எந்த பயனும், பலனும் இல்லை. நமது நிலையை நாம் விளங்க வேண்டுமானால் பிறரை வைத்து ஒப்பிட்டு பார்த்தாக வேண்டும்.
+2 முடித்த பின் நமது குழந்தைகளுக்கு எதை தேர்ந்தெடுக்கிறோம் என்ற நமது நிலைக்கும், +2 முடித்த பின் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன.
தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் என்னென்ன கோர்ஸ்கள் போதிக்கப்படுகின்றன என்பது குறித்தும், ஒரு துறையை தேர்ந்தெடுப்பதற்கு முன் அந்த கோர்ஸை படிப்பதால் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறித்தும் விளக்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
மாணவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:-
10 + 2 + 3 என்ற கல்வி முறையில்தான் நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம். முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை எல்லா பாடங்களையும் படிப்போம். +1, +2 விலிருந்து கலை, அறிவியல் என பாடங்கள் இரு வகைகளாகப் பிரியும். +1, +2 வில் எந்த பாடங்களை தேர்ந்தெடுத்தோமோ அதில் ஒரு பாடப் பிரிவின் அடிப்படையில் கல்லூரி வாழ்க்கை அமையும்.
கணிதம், அறிவியல் படிப்பதற்கு விருப்பம் இல்லாதவர்கள் படிப்பதற்கு கலையியலையும் (Arts Group) கணிதம், அறிவியலில் விருப்பம் உள்ளவர்கள் அறிவியல் துறையையும் (Science Group) எடுப்பதும் வழக்கம்.
அறிவியலிலும், விஞ்ஞானத்திலும் வளர்ந்து வருகின்ற உலகம், வளர்ச்சி அனைத்தையும் அறிவியல், கணிதத்தை மையப்படுத்தியே நகர்ந்து கொண்டு இருக்கின்றன. அது படிப்புக்கும் விதிவிலக்கல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எனக்கு கணிதம், அறிவியல் எனக்கு பிடிக்காது; அதில் எனக்கு விருப்பமில்லை என்று தயவு செய்து விட்டு விடாதீர்கள். அதிலும் மிகுந்த கவனத்தோடு படிக்கின்ற போதுதான் அந்த படிப்பிற்கான உயர்வையும், வலிமையையும் உங்களால் பார்க்க முடியும்.
ஒரு காலத்தில் M.A. (Psychology) யாக இருந்த கோர்ஸ். தற்போது M.Sc.(Psychology) யாக மாறியிருக்கிறது. M.A. Economics ன் பரிணாம வளர்ச்சியில் இன்று M.Sc. Mathematical Economics, Econometrics போன்ற படிப்புகள் உருவெடுத்திருக்கிறது.
எனவே, நாம் உயர வேண்டுமானால் போட்டியாளர்களையும், அவர்களின் தகுதிகளையும், போட்டிக் களத்தையும் தெரிந்து கொள்வது அவசியத்திலும் அவசியம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு துறைகளும் எவ்வாறு உயர்ந்திருக்கின்றன, வளர்ந்திருக்கின்றன என்பதை விளக்கமாக ஓரிரு துறைகளிலும் சுருக்கமாக பல துறைகளில் காணலாம்.
1. பொருளாதாரத் துறை
உலகை நிர்ணயிக்கின்ற, நிர்வகிக்கின்ற, தீர்மானிக்கின்ற துறைகளில் பொருளியல் துறை மிக உயர்ந்த பங்களிப்பை செய்து கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் படித்தால் உலகில் உயர்ந்த நிலைக்கு செல்கின்ற வழியும், வழிகாட்டுதலும் இருக்கின்ற போது அதை பொருட்படுத்தாமல் பொடு போக்காகவும், பொழுது போக்கிற்காகவும் படிக்கின்ற மாணவர்களும், என்னது B.A., Economics ஆ என்று முகம் சுளிக்கின்ற ஒரு சில பெற்றோர்களினால் அதன் முக்கியத்துவமும் தனித்தன்மையும் தெரியாமல் போய் விட்டது.
+2 முடித்த பின் நாம் தேர்ந்தெடுக்கின்ற B.A., Economics என்பதில் எத்தனை கிளைகள் இன்று வளர்ந்திருக்கிறது என்பதை பாருங்கள்.
1. B.A., (Economics)
2. B.A., (Hons) (Economics)
3. B.Sc., (Economics)
4. B.Sc., (Hons) (Economics)
5. B.A., (Business Economics)
6. B.A., (Development Economics)
Post Graduate Courses in Economics (P.G.)
(முதுநிலை பொருளாதார பிரிவுகள்)
1. M.A.,(Analytical & Applied Economics),
2. M.A.,(Economics)
3. M.A.,(Applied Economics)
4. M.A., (Business Economics)
5. M.A., Econometrics
6. M.A., Indian Economy
7. M.A.,(Corporation & Applied Economics
8. M.A., (Quantitative Economics)
9. M.Sc., (Applied Economics)
10. M.Sc., Mathematical Economics
11. M.Sc., Economics
12. M.B.E., (Business Economics)
13. M.A (Financial Economics)
14. M.A (Actuarial Economics)
2. M.A.,(Economics)
3. M.A.,(Applied Economics)
4. M.A., (Business Economics)
5. M.A., Econometrics
6. M.A., Indian Economy
7. M.A.,(Corporation & Applied Economics
8. M.A., (Quantitative Economics)
9. M.Sc., (Applied Economics)
10. M.Sc., Mathematical Economics
11. M.Sc., Economics
12. M.B.E., (Business Economics)
13. M.A (Financial Economics)
14. M.A (Actuarial Economics)
M.Phil & Ph.D in Economics
1.M.Phil (Economics)
2.M.Phil (Applied Economics)
3.M.Phil (Applied Econometrics)
4.Ph.D (Economics)
5.Ph.D (Business Economics)
6. Ph.D (Islamic Economics)
இன்னும்
Agriculture Economics
Financial Economics
Labour Economics
Rural economics
Urban Economics
Industrial Economics
International Economics
Business Economics
Environmental Economics
Development Economics
Behavioral Economics என ஏராளமான துறைகள் தற்போது விரிந்துள்ளன. தமிழகத்தில் அமைந்துள்ள The New College - Chennai, Jamal Mohamed College -Trichy, HKRH College - Uthamapalaiyam போன்ற பல கல்லூரிகளைத் தாண்டி இன்னும் பல பல்கலைக் கழகங்களும் உங்கள் கவனத்திற்கு.
1.M.Phil (Economics)
2.M.Phil (Applied Economics)
3.M.Phil (Applied Econometrics)
4.Ph.D (Economics)
5.Ph.D (Business Economics)
6. Ph.D (Islamic Economics)
இன்னும்
Agriculture Economics
Financial Economics
Labour Economics
Rural economics
Urban Economics
Industrial Economics
International Economics
Business Economics
Environmental Economics
Development Economics
Behavioral Economics என ஏராளமான துறைகள் தற்போது விரிந்துள்ளன. தமிழகத்தில் அமைந்துள்ள The New College - Chennai, Jamal Mohamed College -Trichy, HKRH College - Uthamapalaiyam போன்ற பல கல்லூரிகளைத் தாண்டி இன்னும் பல பல்கலைக் கழகங்களும் உங்கள் கவனத்திற்கு.
பொருளாதார படிப்பை போதிக்கின்ற சில கல்வி நிறுவனங்கள்;
1. Delhi School Of Economics (www.econdse.org)
2. Jawaharlal Nehru University (www.jnu.ac.in)
3. Presidency College, Kolkatta (www.presiuniv.ac.in)
4. University Of Delhi (www.south,du.in)
5. University Of Bombay (www.mu.ac.in)
6. Indian Statistical Institute , Kolkta (www.isical.ac.in)
7. Madras School Of Economics (www.mse.ac.in)
8. IIT, Kanpur (www.iitk.ac.in)
9. University Of Madras (www.unom.ac.in)
1. Delhi School Of Economics (www.econdse.org)
2. Jawaharlal Nehru University (www.jnu.ac.in)
3. Presidency College, Kolkatta (www.presiuniv.ac.in)
4. University Of Delhi (www.south,du.in)
5. University Of Bombay (www.mu.ac.in)
6. Indian Statistical Institute , Kolkta (www.isical.ac.in)
7. Madras School Of Economics (www.mse.ac.in)
8. IIT, Kanpur (www.iitk.ac.in)
9. University Of Madras (www.unom.ac.in)
வேலைவாய்ப்புகள் :
பொருளாதாரம் (ஆராய்ச்சி படிப்பு வரை) பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் :
• Indian Economics Service (IES)
• Reserve Bank of India (RBI)
• National Sample Service (NSS)
• Ministry of Economics Affairs
• Planning Board
• NITIAYOG
• National Council For Applied Economic Research
• National Institute of Public Finance & Policy
போன்ற துறைகளில் பொருளியல் நிபுணர்களாகவும், பொருளியல் ஆலோசகர்களாவும் வேலை செய்யலாம்.
இதைத்தவிர
Accounting
Advertising
Auditor
Communication
Banking & Finance
Actuarial
Marketing
Education
Media Analyst
Research
Management
Retailing
Manufacturing
System Analysis
போன்ற பல துறைகளில் பொருளாதாரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிகிடக்கின்றன.
ஏன் வேலை கிடைப்பதில்லை?
இன்றைய பெரும்பாலான மாணவர்களின், பெற்றோர்களின் குமுறல்கள் எல்லாம் “படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காமல் இருப்பதுதான்.”
வேலை கிடைக்கவில்லை என்பதற்காக அந்த course - களை குறை கூறுவது என்பது மிகப்பெரும் தவறு. எந்த course-ஐ சரியில்லை என்று குறை கூறுகிறீர்களோ அந்த course-ஐ படித்துவிட்டு உயர்ந்த வேலைகள் பார்ப்பவர்களின் பட்டியல்களும் நிரம்ப கிடக்கின்றன.
Advertising
Auditor
Communication
Banking & Finance
Actuarial
Marketing
Education
Media Analyst
Research
Management
Retailing
Manufacturing
System Analysis
போன்ற பல துறைகளில் பொருளாதாரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிகிடக்கின்றன.
ஏன் வேலை கிடைப்பதில்லை?
இன்றைய பெரும்பாலான மாணவர்களின், பெற்றோர்களின் குமுறல்கள் எல்லாம் “படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காமல் இருப்பதுதான்.”
வேலை கிடைக்கவில்லை என்பதற்காக அந்த course - களை குறை கூறுவது என்பது மிகப்பெரும் தவறு. எந்த course-ஐ சரியில்லை என்று குறை கூறுகிறீர்களோ அந்த course-ஐ படித்துவிட்டு உயர்ந்த வேலைகள் பார்ப்பவர்களின் பட்டியல்களும் நிரம்ப கிடக்கின்றன.
வேலை கிடைக்காமல் போவதற்கு மிக முக்கிய காரணங்களில் சில :
ஆர்வமின்றி படிப்பது
நோக்கமின்றி படிப்பது
புரிந்து கொள்ளாமல் படிப்பது
தொலை நோக்கு சிந்தனையில்லாமல் படிப்பது
பிறருக்காக படிப்பது
போன்ற காரணிகள் தான் வேலை கிடைக்காமல் போவதற்கான காரணங்களாக அமைகின்றான.
இஸ்லாமிய பொருளியலின் முக்கியத்துவம் ;
மேற்காணும் பொருளாதார படிப்புகள் எல்லாம் காலத்திற்கும் தகுந்துவாறு மாறிக் கொண்டே இருக்கும். இது எல்லா காலத்திற்கும் இது பொருந்துமா? என்றால் அது கேள்விக் குறிதான். அவைகள் எல்லாம் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு உட்பட்டுதான் இருக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.
எனவே, பொருளாதாரத்தில் எந்த துறையை மாணவர்கள் தேர்ந்தெடுத்தாலும் அதில் இஸ்லாமிய பொருளாதாரத்தை மையப்படுத்தி உங்களது படிப்பும், ஆராய்ச்சியும் அமைய வேண்டும்.
அல்லாஹ், ரசூம் சொன்ன தீர்வுகளை முன் வைத்து இன்றைய பொருளாதார பிரச்சனைகளை அலசும் போது, அதிலிருந்து வெளிவரும் தீர்வுகள் உலகம் மறுமலர்ச்சிக்கான, சமூக நீதிக்கான பயணத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment