மதுரையில் வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக மதுரை
மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுரையிலும் தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ்
கூறியிருப்பதாவது: வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது
கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின்
ஒட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும்.
ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 225 பேர்
பலியாகி உள்ளனர். 2015- உச்சநீதிமன்றம் உத்தரவின் படி அனைத்து ஆவணங்களும்
பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment