சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 'தலைகளை' எண்ணும் நடைமுறைதான் பின்பற்றப்பட இருக்கிறது.
முதல்வராக
பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை
நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது.
சட்டசபை
நாளை காலை 11 மணிக்கு கூடியதும் முதலில் முதல்வராக உள்ள எடப்பாடி
பழனிச்சாமி தமது அரசின் மீதான நம்பிக்கை கோரி தீர்மானம் கொண்டு வந்து
உரையாற்றுவார். அப்போது தமது அரசுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும்
என வேண்டுகோள் விடுப்பார்.
நம்பிக்கை கோரும் தீர்மானம்
பின்னர்
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இதர
கட்சி தலைவர்கள் உரையாற்றுவர். இதன் முடிவில் நம்பிக்கை கோரும்
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
ரகசிய வாக்கெடுப்பு
பொதுவாக
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது 3 நடைமுறைகளில்
இருக்கும். முதலாவது ரகசிய வாக்கெடுப்பு நடைமுறை. நம்பிக்கை கோரும்
தீர்மானத்தின் மீது ஆதரவா? இல்லையா? என்பதை வாக்கு சீட்டில் எழுதி
தெரிவிக்கும் நடைமுறை.
குரல் வாக்கெடுப்பு
அடுத்தது
குரல் வாக்கெடுப்பு நடைமுறை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது
ஆதரிப்போர் ஆம் என்றும் எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் எழுப்புவர். இதனை
சபாநாயகர் கணக்கிட்டு முடிவை அறிவிப்பார்.
தலைகளை எண்ணுதல்
மூன்றாவதாக தலைகளை எண்ணும் நடைமுறை பின்பற்றப்படும். தற்போதைய சட்டசபையானது
6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 234 பேர் இந்த 6 பிரிவுகளில்
அமர முடியும்.
6 பகுதிகளாக...
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கவும் என சபாநாயாகர்
அறிவிப்பார். உடனே சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஒவ்வொரு பகுதியாக சென்று
ஆதரிப்போர்,எழுந்து நிற்க கூறுவார். அவர்களின் பெயர்களை சபாநாயகர் வாசித்து
உறுதி செய்து கொள்வார். இப்படி மொத்தமாக 6 பிரிவுகளிலும் ஆதரிப்போர்
எத்தனை பேர்? எதிர்ப்போர் எத்தனை பேர்? என கணக்கிடப்பட்டு முடிவு
அறிவிக்கப்படும். இந்த நடைமுறைதான் நாளை சட்டசபையில் கடைபிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment