அதிமுகவில் இருந்து சசிகலா அணியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ,
விஜயபாஸ்கர், தங்கமணி, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட பலரும்
கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.
அதிமுக இரண்டாக உடைந்து போய்விட்டது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா தலைமையிலான
அணிகள் மாறி மாறி இருதரப்பையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்து
வருகிறது.
சசிகலா, தினகரன், வெங்கடேஷை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அவைத்
தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 7 மாவட்ட
செயலர்கள் உட்பட 13 மூத்த தலைவர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக
மதுசூதனன் அறிவித்திருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,
தங்கமணி, செல்லூர் ராஜூ, சி. விஜயபாஸ்கர், கொறடா அரியலூர் ராஜேந்திரன்,
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, வளர்மதி, ராஜ்யசபா எம்பி நவநீத
கிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணி
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment