தமிழக உளவுப் பிரிவு ஐஜியாக இருந்து வந்த சத்தியமூர்த்தி விடுப்பில்
போயுள்ளார். அவருக்குப் பதில் புதிய ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம்
நியமிக்கப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார்
தேவாசீர்வாதம். இவரை மாற்றி விட்டுத்தான் சத்தியமூர்த்தி அப்பதவிக்குக்
கொண்டு வரப்பட்டார். தற்போது சத்தியமூர்த்தியை விடுப்பில் அனுப்பி விட்டு
அந்த இடத்திற்கு தேவாசீர்வாதம் வந்துள்ளார்.
ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஏற்கனவே 10 நாள் விடுப்பில்
சென்றுவிட்டார். அவர் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருப்பதாக சசி தரப்பு
கருதியதால் சத்தியமூர்த்தியை விடுப்பில் செல்ல நிர்பந்தித்தது. இந்த
நிலையில்தான் அவர் விடுமுறையில் போயுள்ளார். ஆனால் சத்தியமூர்த்தி சசி
தரப்புக்கு வேண்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் உளவுத்துறை ஐஜியாக தேவாசீர்வாதம்
நியமிக்கப்பட்டார். ஆனால் அதே ஆண்டு டிசம்பர் மாதம் அவரை மாற்றி விட்டு
சத்தியமூர்த்தி கொண்டு வரப்பட்டார். தேவாசீர்வாதத்தை காத்திருப்போர்
பட்டியலில் வைத்தனர். சசிகலா தரப்பின் நெருக்கடி காரணமாகத்தான் அப்போது
தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
TN Intelligence IG Sathyamurthy has been shifted and Dadivson
Devaseervatham has been brought to the post again. Sathyamurthy has gone
on 10 days leave.
60
தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த சத்தியமூர்த்தி விடுமுறையில்
போயுள்ளார். அவருக்குப் பதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிய ஐஜியாக
நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment