ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை
திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த மிதமான நிலநடுக்கத்தால், வீடுகள், கடைகள் உள்பட கட்டிடங்கள் அனைத்தும்
குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீர் மக்கள் மிகவும் பீதிக்கு
உள்ளானார்கள்.
இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிப்பகுதிகளில்
தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ,
பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை. கூடுதல் தகவல்கள்
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment