கூவத்தூரில் செய்தியாளர்கள் மீது மன்னார்குடி குண்டர்கள் மீண்டும்
தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் சாலை மறியலில்
ஈடுப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களை
கட்டாயப்படுத்தி சிறைபிடித்து வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. ஒருவாரமாக
எம்.எல்.ஏக்கள் அங்கேயே உள்ளனர். இதனால் தங்களது குடும்பங்களை சந்திக்க
முடியவில்லை என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல தொகுதிகளில்
எம்.எல்.ஏக்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்
செயலாளர் சசிகலா ஆலோசனை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில்
கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள ரிசார்ட் அருகே செய்தி சேகரிக்க
சென்ற செய்தியாளர்களுக்கு அதிமுக-வினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் அதிமுக நிர்வாகிகள், செய்தியாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது. அப்போது ஆங்கில நாளிதழ் புகைப்பட நிபுணரை மன்னார்குடி
குண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூவத்தூர் ரிசார்ட் முன் செய்தியாளர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் தாக்குதல்
நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பும் செய்தியாளர்கள் மீது
சசிகலா தரப்பு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment