எம்.ஜி.ஆரின் நலப்பணிகளை நாளை முதல் மேற்கொள்ள உள்ளதாக தொண்டர்கள் மத்தியில் ஜெ.அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றியுள்ளார். ஆனால் அதிமுக தொண்டர்களால் இதை ஏற்க முடியவில்லை.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளன.
அதிமுக தொண்டர்களின் ஆதரவு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்குதான்
இருக்கிறது.
தீபா புதிய அரசியல் கட்சியை தொடங்க வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள்
நாள்தோறும் அவரது வீடு முன்பு திரண்டு வருகின்றனர். நாளை எம்ஜிஆர் பிறந்த
நாளில் அரசியல் கட்சியை தொடங்க தீபா திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே இன்று மாலை திடீரென ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தீபாவின்
வீட்டின் முன்பு திரண்டிருந்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய
தீபா, எம்.ஜி.ஆரின் நலப்பணிகளை நாளை முதல் மேற்கொள்வேன். தொண்டர்களின்
எதிர்பார்ப்பு போலவே எனது பொது வாழ்வு அமையும். உங்களுக்காக நான்
இருக்கிறேன். இவ்வாறு தொண்டர்கள் மத்தியில் தீபா பேசினார்.
No comments:
Post a Comment