ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த
குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்
இருக்கும் பி.எஸ்.எஃப். எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தரமான உணவு
வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த படையின் வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் வீரர்களுக்கு சாப்பாடு
வழங்குவதில் ஊழல் நடைபெறுவதாகவும், மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் பேசும்
வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து
விசாரிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள்
அறிக்கை அளிக்க எல்லை பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம்
அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment