டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக
அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளார். ரூபாய் நோட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு
விஷயங்களில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் அரவிந்த்
கேஜ்ரிவால்.
இந்த நிலையில் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ மெயில் ஐடிக்கு மர்மநபர்கள்
சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்
அரவிந்த் கேஜ்ரிவாலை கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த
இ-மெயிலை முதல்வர் அலுவலக அதிகாரிகள் டெல்லி போலீசாருக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர். இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
முன்பு ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி தம்மை கொலை செய்துவிடுவார் என
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீடியோவில் பேசி சமூக ஊடகங்களில்
வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
No comments:
Post a Comment