தோழர் என்று சொல்வது தப்பான வார்த்தையா என கேட்டு சமூக வலைத்தளத்தில்
கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை துளைத்து எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தோழர் எனச்சொல்லி உங்களிடம் யாராவது பேசினால் அவர்களின் தொடர்பை
துண்டியுங்கள்.. என போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவர்களை பார்த்து, சொன்னார்,
அந்த அதிகாரி சைலேந்திர பாபு என்று ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது. தோழர்
என்ற வார்த்தை சமூக தளங்களில் டிரெண்டிங்கானது.
ஆனால், அந்த வார்த்தையை சைலேந்திர பாபு தெரிவிக்கவில்லை. ஒரு டிவிட்டிலும்
அவர் இதை இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவை கமிஷனர்
உண்மையிலேயே அதை கூறியது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ். ஜல்லிக்கட்டு
மீதான தடையை நீக்க வலியுறுத்தி, கோவை வ.உ.சி மைதானத்தில்
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது, கடந்த 23ம்
தேதி அதிகாலை மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
வெளியேறாதவர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.
தடியடி
எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு தர்ணா நடத்திய மாணவர்கள், பெண்கள் மீது
கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட
தாக்குதலை தொடர்ந்து, இதுபோன்ற ஒரு தாக்குதல் கோவையிலும் அரங்கேறியது
மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
செய்தியாளர் சந்திப்பு
தடியடி நடைபெற்ற அன்று போலீசார் மீது பல்வேறு புகார்கள் சமூக
வலைத்தளங்களில் பரவின. போலீசாரே பல இடங்களில் வன்முறைகளை நிகழ்த்தியதாக
வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. இதையடுத்து, மறுநாளான 24ம் தேதி கோவையில்
செய்தியாளர்களை சந்தித்தார் நகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்.
தேச விரோத சக்திகள்
மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சில தேச விரோத அமைப்பினர் இணைந்து
கொண்டனர் என்று கூறிய அவர், அமைப்புகளின் பெயர்களை கூறினார். "மக்கள்
அதிகார மையம், நாம் தமிழர், மே 17 இயக்கம், ஆர்.எஸ்.ஒய்.எப், எஸ்எப்ஐ,
டிஒய்எப்ஐ, சிபிஐ (எம்எல்) போன்ற மதவாத, இனவாத அமைப்புகள் தான் மாணவர்களோடு
இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தின் போது மாணவர்களிடம் தொடர்பை
ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் மாணவர்களை அழைக்க கூடும். தோழர் என
அழைத்து உங்களிடம் பேசினால் தொடர்பை துண்டியுங்கள் என்றார். இந்த
அமைப்புகள் தடை செய்யப்படாதவை. மேலும், காம்ரேட்டுகள் தோழர் என்ற
வார்த்தையை சகஜமாக பயன்படுத்தக் கூடியவர்கள்.
பொறுக்கி தப்பில்லையா
இதைத்தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தோழர் என்ற வார்த்தையின்
பொருளை காவல்துறை மாற்றிவிட்டதே என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
பொறுக்கி என்ற வார்த்தையை (சுப்பிரமணியன் சுவாமி) பயன்படுத்துவதை
குறிப்பிட்டு சாடுகிறது இந்த டிவிட்.
மாமா, மச்சான்
இனி மாமா மச்சானெல்லாம் வேணாம் நண்பர்களை தோழர் என்றே அழையுங்களேன் தோழர்களே.... என்று கூறுகிறது இந்த டிவிட்.
No comments:
Post a Comment