அதிமுகவை கைப்பற்ற மன்னார்குடி குடும்பம் சதி செய்கிறது; உண்மையான
வரலாற்றை திரித்து பேசும் நடராஜனும் திவாகரனும் அதிமுக தொண்டர்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி
வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமைக்கு எதிரான கலகக் குரலாக கேபி முனுசாமி வெளியே
வந்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் கேபி முனுசாமி
கூறியதாவது:
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவர்கள் தற்போது கட்சியை கைப்பற்ற
துடிக்கிறார்கள். பொங்கல் விழாவில் திவாகரன் பேசும்போது 1972-ம் ஆண்டு
திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எஸ்.டி.சோமசுந்தரம், நடராஜன்
பங்கும் பெரியது என கூறியுள்ளார்.
திவாகரன் அபத்த பேச்சு
இது மன்னிக்க முடியாத அபத்தமான பேச்சு. எஸ்.டி.சோமசுந்தரம் தேர்தல் களத்தில் பணியாற்றினார். நானும் 10 பூத்துக்களில் பணியாற்றினேன்.
திவாகரனோட வயசு என்ன?
அப்போது நடராஜன் எங்கிருந்தார்? திவாகரன் எங்கு இருந்தார்? அப்போது திவாகரனுக்கு என்ன வயது என எங்களுக்கு தெரியாதா?
மாயத் தோற்றம்...
கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத, கட்சிக்காக உழைக்காத சாதாரண நபர்
இன்றைக்கு கட்சியை நாங்கள் தான் வழிநடத்துவதாகவும், கட்சியை காப்பாற்றியது
நாங்கள்தான் என்றும், ஒரு பொய்யான மாயையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்க
நினைக்கிறார்கள்.
இரட்டை இலையை மீட்டது யார்?
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெ., ஜா என அணிகள் பிரிந்தபோது இரட்டை இலையை
நாங்கள்தான் மீட்டுக் கொடுத்தோம் என பேசியிருக்கிறார். ஆனால் உண்மையில்
அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு தொண்டர்கள் அம்மா பின்னால் இருந்தார்கள்.
அதை ஜானகி ஏற்றுக்கொண்டார்கள்.
என்ன பாடுபட்டாங்க?
இரட்டை இலையை ஜெயலலிதாவிடம், ஜானகி அம்மா கடிதம் எழுதி ஒப்படைத்தார்கள்.
இந்த மாதிரி உண்மையான வரலாறு இருக்கும்போது நடராஜன் என்ன பாடுபட்டடாரு?
திவாகரன் என்ன பாடுபட்டாரு?
மன்னிப்பு கேளுங்க...
ஒரு கட்சியை முழுக்க முழுக்க ஒரு குடும்பம் கைப்பற்ற சதி நடக்கிறது. அந்த
சதிக்கான இந்த கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். அதிமுக உறுப்பினர்
ஒவ்வொருவரிடமும் திவாகரனும், நடராஜனும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஓபிஎஸ்-சுக்கு நெருக்கடி
முதல் அமைச்சராக ஒ.பன்னீர்செல்வத்துக்கு தேவையில்லாத நெருக்கடியை
கொடுக்கிறார்கள். இன்று மக்கள் எளிமையாக சந்திக்கக் கூடியவராக அவர்
இருக்கிறார். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நேரிடையாக ஆந்திரா சென்று
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொதிப்பு
அப்படிப்பட்டவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். நடராஜன், திவாகரன்
செயல்களால் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.
இவ்வாறு முனுசாமி கூறினார்.
No comments:
Post a Comment