அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி
போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து
இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்களை இணையதளத்தில்
இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு அவர் கடும்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணையதள வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் கனடா
பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி நிறத்திலான மிதியடிகள்
விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக
இருப்பதாக அமேசானுக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தது.
கனடா வாழ் இந்தியர்களின் தொடர் போராட்டத்தால் அந்த பொருட்களை அமேசான்
நிறுவனம் இணையதளத்திலிருந்து நீக்கியது.
இந்தநிலையில், இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான அனைத்து
பொருட்களையும் இணையதளத்திலிருந்து உடனடியாக அமேசான் நீக்க வேண்டும்.
அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும் என்று வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு நீக்கவில்லை என்றால் அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய
அரசு விசா வழங்காது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும்
மறுபரீசீலனை செய்யும் என்று சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம்
எச்சரித்துள்ளார்.
அமேசான் விளக்கம்:
இதுகுறி்த்து விளக்கம் அளித்துள்ள அமேசான் நிறுவனம், இந்திய தேசியக் கொடி
நிறத்திலான மிதியடிகள் அமேசானில் விற்பனை செய்யப்படவில்லை. இதுகுறித்து
உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment