அருணாசல பிரதேசத்தில் 33 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால், அதிரடி அரசியல் திருப்பமாக அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது.
அரசியல் திருப்பம்
அதைத்
தொடர்ந்து புதிய முதல்–மந்திரியாக டக்கம் பரியோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அவருக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்கள் திடீரென பெமா காண்டு பக்கம்
தாவினர்.
இந்தநிலையில், அதிரடி திருப்பமாக பெமா காண்டு தலைமையில்
அருணாச்சல் மக்கள் கட்சியின் 43 எம்.எல்.ஏ.க்களில் 33 பேர், பாரதீய
ஜனதாவில் நேற்று சேர்ந்தனர்.
பாரதீய ஜனதா ஆட்சி
இதையடுத்து பாரதீய ஜனதாவில் தன்னோடு இணைந்த 32 எம்.எல்.ஏ.க்களை பெமா
காண்டு, சட்டசபை சபாநாயகர் டென்சிங் நோர்புவிடம் அழைத்து சென்று
காட்டினார். அவர்கள் பாரதீய ஜனதாவில் சேர்ந்ததை சபாநாயகர் அங்கீகரித்தார்.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அருணாச்சல் மக்கள் கட்சி ஆட்சி இல்லை. அது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியாக மாற்றம் பெற்றது.
புதிய விடியல்
இதுபற்றி சட்டசபை வளாகத்தில் பெமா காண்டு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அருணாசல
பிரதேசத்தில் கடைசியில் தாமரை (பாரதீய ஜனதா தேர்தல் சின்னம்)
மலர்ந்திருக்கிறது. புதிய ஆண்டில் புதிய ஆட்சியின் கீழ் மாநில மக்கள் புதிய
விடியலை காண்பார்கள். மாநில மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு,
சூழ்நிலைகள் நிர்ப்பந்தப்படுத்தியதின் விளைவாக அனைவரும் பாரதீய ஜனதாவில்
சேர முடிவு எடுத்தோம். காங்கிரஸ் கட்சியின் பல்லாண்டு கால தவறான ஆட்சிக்கு
பின்னர் இங்கு வளர்ச்சி இல்லை என கூறினோம். மாநிலத்தை முன்னேற்றத்துக்கும்,
வளர்ச்சிக்கும் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் நாங்கள் அருணாச்சல் மக்கள்
கட்சியில் சேர்ந்தோம். அங்கும் பழைய நிலைதான் தொடர்ந்தது. எம்.எல்.ஏ.க்களை
கட்சி தலைவர் ஜனநாயக ரீதியில் நடத்த வில்லை.
எனவே வளர்ச்சியை
நோக்கமாக கொண்டு, நாங்கள் பாரதீய ஜனதாவில் சேர முடிவு எடுத்தோம்.
மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமையாதவரையில், வளர்ச்சி அடைய முடியாது. இனி
இங்கு பிரிவினைவாத அரசியல் இருக்காது. நாங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம்
செலுத்துவோம்.
இப்போது இருந்து இந்த அரசு, பாரதீய ஜனதா அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
அருணாச்சல் மக்கள் கட்சி குற்றச்சாட்டு
இதற்கிடையே, ‘‘பெமா காண்டு 32 எம்.எல்.ஏ.க்களுடன் பாரதீய ஜனதாவில்
சேர்ந்ததை தொடர்ந்து, மாநிலத்தில் அந்தக் கட்சியின் ஆட்சியை நிறுவுவதற்காக
பாரதீய ஜனதா கட்சி கடத்திச் சென்று விட்டது’’ என்று அருணாச்சல் மக்கள்
கட்சி தலைவர் கபா பெங்கியா குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
60 உறுப்பினர்களை கொண்ட அருணாசல பிரதேச மாநில சட்டசபையில், அருணாச்சல் மக்கள் கட்சிக்கு இப்போது 10 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
பெமா
காண்டு அணியினர் கட்சி தாவியதை தொடர்ந்து பாரதீய ஜனதா உறுப்பினர்கள்
எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துவிட்டது. 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பெமா
காண்டுவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment