பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பி.எட் படிப்பில் அறிவியல், கணித
பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு
அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு 154 பொறியியல் பட்டதாரிகள்
விண்ணப்பித்திருந்தனர்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.) பணி நெருக்கடியின் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல், திருமணம், குடும்பம் என்று ஆன பிறகு இத்தகைய பணிச்சூழல் சரிப்பட்டு வராது. ஆசிரியர் வேலை, நிம்மதியான பணி போன்ற காரணங்களால் ஆசிரியர் பணியை விரும்புவதாகவும் அதற்காக பி.எட் படிப்பில் சேருவதாகவும் கலந்தாய்வுக்கு வந்திருந்த பெரும்பாலான பெண் பொறியியல் பட்டதாரிகள் தெரிவித்தனர். பி.எட் படிப்புக்காக நிறைய பேர் முன்னணி ஐடி நிறுவனங்களில் பார்க்கும் வேலையை உதறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல பெண்கள் ஆசிரியர் பணி பாதுகாப்பானது, எந்தவிதமான நெருக்கடியும் இன்றி பணியாற்றலாம் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளவும் முடியும் அதற்கு ஏற்ற பணி ஆசிரியர் பணிதான் பெண்களுக்கு ஏற்ற பணி என்று அவர்கள் நம்புகின்றனர்.
தற்போது இன்னொரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது மேலே நாம் படித்த பொறியியல் பட்டதாரிகள் சுயமாக விரும்பி பி.எட்., படிப்பில் சேரவில்லை. தற்போது அவர்கள் பார்த்துவரும் வேலையின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட பிடிப்பின்மை, சூழலியல் சார்ந்த நிம்மதியின்மையின் காரணமாகத்தான் மாற்றுப் பணியாக ஆசிரியர் பணியினை நாடி வந்துள்ளனர். அவர்கள் ஆசிரியர் பணியை முழு திருப்தியுடன் முழு தகுதியுடன் செய்வார்களா என்பதுதான் தற்போதைய கேள்வி.
என்றாலும் காலப்போக்கில் அவர்கள் தங்களை தரம் உயர்த்திக் கொண்டு ஆசிரியர் பணியை சிறாப்பாக செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சரியானதுதான். எதிர்பார்த்ததும் கூட. விதிவிலக்கான சிலர்கள் தவிர பொதுவாக பெண்களின் இயல்புக்கு பொருந்தாத பொறியல் துறையின் பக்கம் பெண்களின் கவனத்தை திருப்புவது பொருளாதார மற்றும் காலவிரயமே. இனிவரும் தலைமுறை இது விஷயத்தில் தெளிவாக முடிவெடுக்கும் என்று நம்புவோம். ஆசிரியர் பணி பெண்களின் இயல்புக்கு ஏற்றது. அவர்களால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையான இன்றைய குழந்தைகளை பக்குவப்படுத்த முடியும்.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment