அதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி நெருக்கடி எதுவுமே
தரவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் திட்டவட்டமாகத்
தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்த்தது முதலே அதிமுக ஆட்சி, கட்சிக்கு பாஜக
நெருக்கடி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஜெயலலிதாவை மறைவைத்
தொடர்ந்தும் முதல்வர் யார்? அதிமுக பொதுச்செயலர் யார் என்பதிலும் பாஜக
தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் இன்று அதிமுக செய்தித் தொடர்பாளர்
பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பொன்னையன் அளித்த
பதில்:
அதிமுக ஜெயலலிதாவின் அணுகுமுறையை பின்பற்றுகிறது. யாரிடம் இருந்தும் எந்த
ஒரு நெருக்கடியும் அதிமுகவுக்கு வரவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா அதிமுகவைக் காப்பாற்றும். அதிமுக கொள்கை
கோட்டையாக திகழ்கிறது.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
No comments:
Post a Comment