வர்தா புயல் வங்கக் கடலில் சென்னைக்கு 330 கிலோமீட்டர் தொலைவில் நி்லை
கொண்டுள்ளது. அது மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது நாளை பிற்பகலில் தெற்கு ஆந்திரா
மற்றும் சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் இன்று மாலை
முதல் மழை பெய்யத் தொடங்கும் என்றும் அது மெல்ல மெல்ல அதிகரித்து மிக பலத்த
கனமழையாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வர்தா புயலால் வட
மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் மழை பெய்யும் என்றும்
வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போன்று இன்று மாலையில் இருந்தே 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று
வீசத் தொடங்கும் என்றும் இது நாளைக்கு மேலும் அதிகரித்து 90 கி.மீ
வேகத்தில் வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி காற்று பலமாக வீசி
வருகிறது.
கடல் மிக அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வட கடலோர மாவட்ட
மீனவர்கள் மட்டுமல்லாமல் மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள்
பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்தா
புயலை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment