சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து
வழுவிழந்தது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நண்பகல் 12 மணிக்கு சென்னை அருகே
கரையை கடக்கத் துவங்கியது. இந்நிலையில் புயலின் மையப் பகுதி 3 மணிக்கு
கரையை கடக்கத் துவங்கியது.
அதிதீவிர வர்தா புயலின் மேற்குப் பகுதி சென்னை அருகே கரையை
கடந்துவிட்டது. புயலின் மையப்பகுதி 3 மணிக்கு துவங்கி 4 மணிக்குள் சென்னை
துறைமுகம் அருகே கரையை கடந்தது.
வர்தா புயலின் கிழக்கு பகுதி முழுமையாக கரையை கடந்தது. புயல் கரையை
கடந்தாலும் இரவு 7 மணி வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்ததையடுத்து சென்னையில் காற்றின் வேகமும், மழையும் குறையும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும்,
அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில்
காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment