வர்தா புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்
செல்லும் பேருந்துகள் இரவு 7 மணி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே இன்று கரையை
கடந்தது. புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை
வரலாற்றில் முதல்முறையாக இன்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று
வீசியது.
வர்தா புயலால் சென்னை நிலைகுலைந்து போயுள்ளது. பல்வேறு இடங்களில்
நூற்றுக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இதற்கிடையே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் சேவை
நிறுத்தப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள்
எதுவும் இயக்கப்படவில்லை.
புயல் கரையை கடந்துவிட்டதையடுத்து இரவு 7 மணி முதல் மீண்டும் பேருந்துகள்
இயக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment