வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் முதல்வர் ஓபிஎஸ்
-சென்னையில் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட வெளியூர் பேருந்து சேவை தொடக்கம்
-இரவு 7 மணி முதல் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
-இரவு 6.51: வர்தா புயல் பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வருவர்- சோனியா
-இரவு 6.44: வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது
-இரவு 6.34: சென்னை அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது
-புயலின் கிழக்குப் பகுதி சென்னை அருகே முழுமையாக கரையை கடந்தது
-சென்னையில் காற்றின் வேகமும் மழையும் குறையும்
-சென்னையில் மழை படிப்படியாக குறையும்
-ஒருசில இடங்களில் கனமழை நீடிக்கும்ன்
-அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை
-காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 60 கி.மீ. வேகமாக குறையும்
-இரவு 6.25 மணி: வர்தா புயலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
-சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை
-இரவு 6.15: சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 2 அரசு பேருந்துகள் மீது மரம் விழுந்தது
-மாலை 5.42: சென்னை மீனம்பாக்கம் 18 செ.மீ; செம்பரம்பாக்கம் 16 செ.மீ மழை
-சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை
-மாலை 5.19: சென்னை விமான நிலையம் இரவு 8 மணிவரை மூடல்
-சென்னை விமான நிலையத்தில் சேதங்களை சரி செய்யும் பணி தொடருகிறது
-மாலை 5.14: முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் புயல் நிலவரம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
-அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது- ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் ஓபிஎஸ்
-மாலை 5 மணி: சென்னையில் மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம்
-அதிதீவிர புயல் வர்தாவின் மையம் இன்று 3.30மணிக்கு சென்னை துறைமுகம் அருகே கடந்தது
-புயலின் கிழக்குப் பகுதி இரவு 6.30 மணிவரை கடக்கும்
-மாலை 5.03: வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்து முடிந்தது
-வர்தா புயலின் கிழக்கு பகுதி கரையை கடந்து கொண்டிருக்கிறது
-மணிக்கு 70 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்- பாலச்சந்திரன்
-ஸ்ரீஹரிகோட்டம்- மரக்காணம் வரை காற்றின் வேகம் இருக்கும்
-மிதமான மழை தொடர்ந்து நீடிக்கும்
-மாலை 4.58: புயலால் சென்னையில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிப்பு
-மாலை4.35: சென்னை, திருவள்ளூர், காஞ்சி மக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்
-போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்- முதல்வர் ஓபிஸ்
-வர்தா புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்
-இரவு 7 மணிக்கு பின்பும் கனமழை நீடிக்கும் என்பதால் வெளியே வர வேண்டாம்
-புயல் பாதிப்புகளை உடனே சீர் செய்ய உத்தரவு- முதல்வர் ஓபிஎஸ்
-மின்சாரம், குடிநீர் பிரச்சனைக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்
-மாலை 4.26: மின்கம்பங்கள் மீது விழுந்த 3,000 மரங்கள் அகற்றம்- தங்கமணி
-வர்தா புயலால் 3,000 மின்கம்பங்கள் சேதம்- மின் துறை அமைச்சர் தங்கமணி
-போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்கள் அமைக்கப்படும்
-வெளிமாவட்டங்களில் இருந்து 2,000 பேர் கொண்டுவரப்பட்டுள்ளனர்
-சென்னை நகருக்கு இரவுக்குள் மின்சாரம் கொடுக்க முயற்சி
-மாலை 4.18: திருவள்ளூர் அருகே பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்தது
-மாலை 4.08 மணி: பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கிறது
-மாலை 4.08 மணி: பொதுமக்கள் மாலை 6 மணிவரை வீட்டை விட்டு வெளியேற வர வேண்டாம்
-மாலை 3.45: சென்னையில் இன்னும் 3 மணிநேரம் கனமழை நீடிக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
-மாலை 3.45 மணி: சென்னையில் இருந்து 6கிமீ தொலைவில் வர்தா புயலின் மையப்பகுதி
-மாலை 3.45 மணி: வர்தா புயலின் மையப்பகுதி இன்னும் 15 நிமிடங்களில் முழுமையாக கரையை கடக்கும்
No comments:
Post a Comment