இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து
விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 47 பயணிகளும் உயிரிழந்ததாக
அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானின்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானம், இன்று
மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று
கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து
கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு
நிலவிய நிலையில், அம்மாவட்டத்தின், பிப்லியன் பகுதி அருகே விழுந்து
நொறுங்கியது.
இதில் விமானத்தில் பயணித்த 9 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 47 பேர்
உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment