ஹுப்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கணக்கில் காட்டாத ரூ.23 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர், மேலும், அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார்
கணக்கில் காட்டாத ரூ.23 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும்,
அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
500, 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் நாடு
முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே புதன்கிழமை இரவு போலீசார்
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்றினை வழிமறித்த
போலீசார் அதில் கணக்கில் காட்டாத பணம் ரூ.23 லட்சம் இருப்பதை
கண்டுபிடித்தனர். அந்த பணத்தில் 20 லட்சம் மதிப்பில் புதிய 2000 ஆயிரம்
ரூபாய் நோட்டுகளும், 3 லட்சம் 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தது விசாரணையில்
தெரியவந்தது.
மேலும் அந்தப் பணம் ஹுப்ளியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கடாக்கில் உள்ள
லட்சுமிஸ்வரா என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
கண்டறியப்பட்டது.குண்டகேலா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார்
அந்த வாகனத்தை மடக்கி ஆய்வு நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். அதில்
தொடர்புடைய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.


No comments:
Post a Comment