அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்வதை எதிர்த்து ராஜ்யசபா
எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவின் சட்டவிதிகளின் படி 5 ஆண்டுகாலம் கட்சியின் உறுப்பினராக
நீடிப்பவரே பொதுச்செயலராக முடியும். ஆனால் சசிகலா 2011-ம் ஆண்டு அதிமுகவில்
இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம்
மன்னிப்பு கேட்டு அறிக்கை கொடுத்தார். அப்போது சசிகலா மீண்டும் அதிமுகவில்
சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் சசிகலாவை பொதுச்செயலராக்க வேண்டும் என்ற
கோரிக்கை திணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 ஆண்டுகாலம் தொடர்ந்து
உறுப்பினராக இல்லாத சசிகலா அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலராக
முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து
அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


No comments:
Post a Comment