ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு
வருவதால் மனம் உடைந்து போன முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து
கொண்டார். அவரது குடும்பத்தினரை சந்திக்க முயன்ற டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் எம்.எல்.ஏ. சுரேந்தர்
ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.
இந்தியாவில் ஒன் ரேங்க் ஒன்
பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் முன்னாள்
ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற
இது தொடர்பான போராட்டத்தில் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ
வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் தீவிரமாக பங்கேற்றார். ஓய்வு பெற்ற
ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனம்
உடைந்து போயிருந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன்
கிரேவால் குடும்பத்தினரை ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சந்திக்க முயன்ற
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா
மற்றும் எம்.எல்.ஏ. சுரேந்தர் ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.
கிரேவால்
குடும்பத்தினரும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தப்போவதாக
அச்சுறுத்தியதை அடுத்து அவர்களையும் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment