அதிராம்பட்டினம், அக்-27
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ்
பரப்பளவில் அமைந்துள்ளன. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு
மிக்கது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீராட
பயன்படுகிறது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை
இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது. வடகிழக்கு
பருவ மழை நீரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குளத்தில் தற்போது தண்ணீர்
குறைந்து காணப்படுகிறது.
குளத்தின் கரைப்பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இருந்த போதிலும், அதில் எதிலும் மின்விளக்குகள் பொருத்தப்படததால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். இதுகுறித்து அறிந்த இப்பகுதி சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர்.
இதில், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) அமீரகம் அமைப்பின் சார்பில் செடியன் குளக்கரை வடக்கு பகுதி மின்கம்பத்தில் குளக்கரை முழுவதும் ஒளி படரும் வகையில் மின்விளக்கு ஒன்று பொருத்த ஏற்பாடு செய்தனர். கடந்த வாரம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் செடியன் குளம் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதனால் இப்பகுதியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். TIYA நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment