திமுக தலைவர் கருணாநிதிக்கு அலர்ஜி ஏற்பட்டு உடல்நலம்
பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வாமையால் அவரது உடல்நலம்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும்
என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக
தலைவர் கருணாநிதிக்கு சில நாட்களாக மருத்துவ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர்
வழக்கமாக உட்கொள்ளும் மருந்தில் ஒன்று ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அவர் சில
நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்கவில்லை. திருமணம், பிறந்தநாள் என கட்சியினர் ஆசி வாங்க சென்றால்
அவர் ஆசி வழங்கி போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.
கடந்த சில நாட்களாகவே அதுபோன்ற நிகழ்வுகள் எதுவுமே நடைபெறவில்லை. அதே
நேரத்தில் அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வருகிறது. இந்த
நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக இன்று அறிக்கை
வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment