பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரகாத்துஹு...
சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை
என்பதை நாம் அறிவோம்.இங்கே எதை விளையச்
செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய இருக்கின்றோம்.இவ்வுலகம்
மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது.
கடந்த 10 வருடங்களாக நமது மஹல்லாவின் நலனை கருத்தில்
கொண்டு எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் தீட்டி பல சேவைகளை நாம் செய்து வருகிறோம். கடந்த
இரண்டு வருடமாக குர்பானித் தோல் வசூல் திட்டமும் நம் செய்து வருகிறோம் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்தவை. நமது மஹல்லாவில்
கிடைக்கும் குர்பானி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்தும் குவைத்தில்
சகோ. பாவா பகுருதீன் அவர்கள் மாதாமாதம் தரும் தொகையையும் வைத்து நமது மஹல்லாவில் உள்ள
ஆதரவற்ற முதியோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கி
வருகிறோம்.
சென்ற ஆண்டு போன்று இந்த ஆண்டும் வருகின்ற ஹஜ் பெருநாள் அன்று நமது மஹல்லாவில்
சேரும் தோல்களை வசூல் செய்து வருகின்ற ஆண்டும்
தொடர்ந்து உதவி தொகையை வழங்க திட்டம் தீட்டியுள்ளோம். நமது மஹல்லாவாசிகள் அனைவரும்
கடந்த வருடம் போல் இந்த வருடமும் நமது TIYA நிர்வாகிகளிடம்
வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
சென்ற வருடம் குர்பானித் தோல்களை வழங்கி ஆதரவு நல்கியது போன்று இந்த வருடமும்
வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் உங்கள் அன்புடன்
அமீரகம் மற்றும் அதிரை TIYA நிர்வாகம்
மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்
No comments:
Post a Comment