Latest News

மகனையும், பின்னர் மகளையும் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க தாய் கைது!


அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகனையும், சமீபத்தில் மகளையும் திருமணம் செய்து கொண்ட தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒலகோமா மாநிலத்தை சேர்ந்தவர் பாட்ரிகா ஸ்பேன் (43). இவர் கடந்த மார்ச் மாதம் தனது மகளை மிஸ்டி ஸ்பேன் (25) என்பவரை சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டார். மனித சேவை துறையினர் வீடுகளில் நடத்திய குழந்தைகள் நல விசாரணையின் போது, இது வெளிச்சத்திற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து முறைகேடாகத் திருமணம் செய்து கொண்டதாக பாட்ரிகாவையும், மிஸ்டியையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாட்ரிகா கடந்த 2008ம் ஆண்டு தனது மகனையும் சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏன் இவ்வாறு தன் மகன் மற்றும் மகளை பாட்ரிகா திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், தனது மகளின் பிறப்புச் சான்றிதழில் தனது பெயர் இல்லாததால் இந்தத் திருமணம் மூலம் தான் சட்டத்தை மீறவில்லை என வாதாடி வருகிறார் பாட்ரிகா. தற்போது, இந்த வினோத வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.