Latest News

கவனித்துக் கொள்கிறேன் என்றார்.. வாழ்ந்தோம்.. ஆனா.. எஸ்ஐ மீது பெண் காவலர் சரமாரி புகார்!


திருமணமான சப் இன்ஸ்பெக்டருடன் காதல் கொண்டார் ஒரு பெண் காவலர். கடைசியில் தன்னை ஏமாற்றி விட்டார் எஸ்ஐ என்று கூறி தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அப்பெண் காவலர். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதனால் அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன். ஆனால் இப்போது பேசுவதில்லை, பழகுவதில்லை என்றும் அப்பெண் காவலர் குமுறியுள்ளார். சம்பந்தப்பட்ட எஸ்ஐயின் பெயர் அருமை நாயகம். திருமணமாவர். இவர் மீதுதான் பெண் காவலர் ரமா புகார் கொடுத்துள்ளார்.

பாப்பாக்குடி அருமைநாயகம் நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலையப் பணியிலிருந்தவர் போலீஸ்காரரான அருமைநாயகம். சீதபற்பநல்லூர் காவல் நிலையப் பணியிலிருந்தவர் ரமா. பணி நிமித்தம் இவர்கள் சந்தித்திருக்கிறார்கள். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அருமைநாயகம் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ரமாவை திருமணம் செய்து கொள்வதாக அருமைநாயகம் சொல்லி விட்டு பின் ஏமாற்றி விட்டாராம். இதனால் தன்னை ஏமாற்றியதாக. 2015ம் ஆண்டு ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ரமா.

நேரில் இல்லை, செல்லில்தான் இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தினர். அப்போது, ரமாவுடன் நேரடிப் பழக்கம் இல்லை செல்போனில் தான் பேசியுள்ளேன் என்று அருமைநாயகம் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து அவர்களின் புகார் தொடர்பான விசாரணை முடித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு அருமைநாயகமும் ரமாவும் ஆலங்குளம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை பார்த்துள்ளனர்.

மீண்டும் பற்றிக் கொண்ட காதல் அவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே அருமைநாயகம் எஸ்.ஐ. ஆகப் பதவி உயர்வு பெற்று பயிற்சிக்காக சென்னை சென்று விட்டாராம். இந்த நிலையில் ரமா, அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் அருமைநாயகம் மீது சரமாரியாக புகார் கூறியுள்ளார்.

சொன்னார்.. பழகினேன் ரமா தனது புகாரில், அருமைநாயகத்திற்கும் எனக்கும் பழக்கம் உண்டு. உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னார் நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னார். தற்போது அவர் என்னிடம் பேசுவதுமில்லை பழகுவதுமில்லை. அவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருப்பதை மறைத்து விட்டு என்னையும் ஏமாற்றி விட்டார் என்று புகார் மனுவில் ரமா தெரிவித்துள்ளார்.

வழக்குப் பதிவு இந்தப் புகாரை ஏற்று அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, சேரன்மாதேவி டி.எஸ்.பி. ராஜேந்திரனின் உத்தரவுப்படி அருமைநாயகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.