தமிழகத்திற்கு செல்லும் காவிரி நதி நீரை நிறுத்திவிட்டு, முதல்வர்
பதவியை ராஜினாமா செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க அவசர அமைச்சரவை கூட்டம்
பெங்களூரில் கூடியுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி
தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா
தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று முதல் தினமும்
தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட
வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சீராய்வு மனு காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழகத்திற்கு
கிடைக்கும். இதனால் மேலும் கோபமடைந்த கன்னட அமைப்புகள் மற்றும் சில
விஷமிகள் நேற்று பெங்களூரில் பெரும் கலவரங்களை நடத்தினர்.
அமைச்சரவை கூட்டம்
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களை தேடி தேடி அடித்து
நொறுக்கினர். இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் 12
மணியளவில் பெங்களூரில் கூடியது. முதல்வர் சித்தராமையா தலைமை வகித்துள்ளார்.
சித்தராமையா ராஜினாமா
இக்கூட்டத்தின்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா
முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஏற்கனவே
சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது இம்முடிவு
எடுக்கப்பட்டதாகவும், அமைச்சரவையில் இதை இறுதி செய்ய சித்தராமையா
திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அனுதாபத்தை ஈட்ட திட்டம்
குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டார்கள்
என்ற கெட்ட பெயரிலிருந்து தப்பிக்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டு இந்த
திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இதன்மூலம் தண்ணீருக்காக
பதவியையும் இழந்தவர் சித்தராமையா என்ற அனுதாபத்தை மக்கள் மத்தியில் பெற
காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது
நீரை நிறுத்த முடிவு
மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், காவிரி நதிநீரிலிருந்து
தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை நிறுத்திவிட சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. இது கோர்ட் அவமதி்ப்பு என்றபோதிலும், அரசியல்
ரீதியாக பெரும் வாக்குகளை காங்கிரசுக்கு ஈட்டித்தரும் என்பதால் இந்த முடிவை
காங்கிரஸ் அரசு எடுக்க உள்ளது. இதுகுறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட உள்ளதால் அமைச்சரவை முடிவை இரு மாநில மக்களும்
எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தேர்தல் லாபம்
முதல்வர் பதவியிலிருப்பவர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டியது
கட்டாயம். இவ்வாறு நடக்க முடியாத நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா
செய்துவிடலாம். மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் நம்மையே
தேர்ந்தெடுப்பார்கள் என்பது சித்தராமையா அன்டு கோவின் திட்டமாம்.
பலே திட்டம்
ஏற்கனவே 3 வருடங்களை கடந்துவிட்ட சித்தராமையா அரசு பல்வேறு சர்ச்சைகளில்
சிக்கி மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. எனவே அடுத்த பொதுத் தேர்தலில்
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசமைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேச்சு
உள்ளது. எனவே மக்கள் உணர்ச்சிகளை பயன்படுத்தி இப்போது ராஜினாமா செய்து
மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment