தமிழர்களைத் தாக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி
நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 500 பேர்
கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் ஒரே நாளில் 100க்கும் அதிகமாக பேருந்துகளும் லாரிகளும்
கூண்டோடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ரூ200 கோடிக்கும் அதிகமான
தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கர்நாடகாவுக்கு தமிழகத்தின் என்.எல்.சி-யில் இருந்து
செல்லும் மின்சாரத்தை துண்டிக்க வலியுறுத்த நெய்வேலியில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
நெய்வேலி டவுன்ஷிப்பில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடகாவுக்கு எதிராக
முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கர்நாடகாவுக்கான மின்சாரத்தை துண்டிக்க
வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment